பாலியல் புகாரில் கைதான சாமியார் சிவசங்கர் பாபா சிறையில் அடைப்பு

0 2432

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. உத்தரகாண்டில் இருந்து தப்பியோடி டெல்லியில் தலைமறைவாகியிருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் புதன் கிழமை கைது செய்தனர்.

பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, சிவங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அம்பிகா உத்தரவிட்டார். பின்னர், சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments