ஆஸ்திரியா அணிக்கு எதிரான யூரோ கோப்பை போட்டியில் நெதர்லாந்து வெற்றி

0 3077
ஆஸ்திரியா அணிக்கு எதிரான யூரோ கோப்பை போட்டியில் நெதர்லாந்து வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டங்களில் உக்ரைன், பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.

ரூமேனியாவில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் உக்ரைன், வடக்கு மாசிடோனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 29 மற்றும் 34-வது நிமிடங்களில் உக்ரைன் வீரர்கள் Andriy Yarmolenko மற்றும் Roman Yaremchuk கோல்களை அடித்து வெற்றிக் கணக்கை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து வெற்றி பெற போராடிய மாசிடோனியா அணியில் வீரர் Ezgjan Alioski 57-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியும் வெற்றிக்கான இலக்கை அடைய இயலவில்லை. இறுதியில் உக்ரைன் 2-க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோபன்ஹேகன் மைதானத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் 1-க்கு 2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் டென்மார்க் அணி தோல்வியை தழுவியது.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் Yussuf Poulsen கோல் திருப்பி புள்ளி கணக்கை தொடங்கிய நிலையில், 2-ஆம் பாதியில் பெல்ஜிய வீரர்கள் ((54, 70)) தோர்ஹன் ஹசார்ட் மற்றும் Kevin De Bruyne ஆகியோர் அடுத்தடுத்து பதில் கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

லீக் வெற்றியின் மூலம் பெல்ஜியம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஆம்ஸ்டர்டெம் மைதானத்தில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் 2-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் ஆஸ்திரியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி அடுத்து சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் அனல் பறக்கும் ஆட்டத்தில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர்கள் memphis depay, மற்றும் denzel dumfries ஆகியோர் கோல்களை திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments