நாடு முழுவதும் தற்போது 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தகவல்

0 2175

நாடு முழுவதும் தற்போது 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த 3 நாட்களில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளுக்கு 56 லட்சம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது 2 கோடியே 18 லட்சம் டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும், வீணான தடுப்பூசி உள்பட இதுவரை 25 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 417 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments