பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பிரதமரிடம் அளித்த கோரிக்கை தொடர்பாக விளக்கம்

0 2553

நீட் தேர்வு ரத்து, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முன்வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக பிரதமர் தனக்கு வாழ்த்துச் சொன்னதாக கூறினார்.
கூடுதலாக தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

 பிரதமரிடம் வழங்கியுள்ள மனுவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் நிறைவேறும் வரை, தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் கூறினார். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களோடு கலந்துபேசி நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி அளித்தார் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

டெல்லியில் தங்கி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை இன்று சந்தித்துப் பேசுகிறார். பிரதமர் மோடியை அரசு முறையில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் ரீதியான சந்திப்புகளையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேற்கொண்டுள்ளார். இந்திய கம்யுனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments