வைரஸ் வசந்த் காய்ச்சல் கருப்பன் சுடுதண்ணி சுப்பிரமணி..! கொலைவெறி பாய்ஸ் பராக்..!

0 4045
வைரஸ் வசந்த் காய்ச்சல் கருப்பன் சுடுதண்ணி சுப்பிரமணி..! கொலைவெறி பாய்ஸ் பராக்..!

ள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற நண்பனின் திருமணத்திற்கு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக,  நடிகர் வடிவேலுவின் பாணியில் வித்தியாசமான அடைமொழியுடன் தங்கள் பெயர்களை குறிப்பிட்டு திருமண வாழ்த்து பேனர் வைத்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர் உள்ளூர் இளைஞர்கள்.

கைப்புள்ள... தீப்பொறி திருமுகம்... டெலக்ஸ் பாண்டியன்... பேக்கரி வீரபாகு .. ஏட்டு ஏகாம்பரம் போல வித்தியாசமான பெயர்களில் மக்கள் மனதில் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக அச்சிடப்பட்ட திருமண பேனர் ஒன்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரைச் சேர்ந்த பொறியாளர் ராஜ்குமார் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக ராஜ்குமாரின் நண்பர்கள் வைத்த டிஜிட்டல் பேனர் தான் கொரோனா விழிப்புணர்வு பேனராக வைரலாகி வருகின்றது.

மணமகனைத் தொற்றாளர் எனவும், மணமகளைத் தொற்றிக் கொண்டவர் எனவும், அவர்களுக்கு நடக்கின்ற திருமணத்தை கோவிட் 19 எனவும் ,குறிப்பிட்டுள்ள இந்த 'கொலைவெறி பாய்ஸ்', இனி போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவியுடன் என்று கிண்டல் செய்துள்ளனர்.

அதையெல்லாம் விட அந்த பேனர் அடிக்க காசு போட்ட மகாபிரபுக்களின் பெயர்கள் அனைத்தும் அடைமொழியோடு இடம் பெற்றுள்ளன. நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ், கோவிட் குமார், பாசிட்டிவ் பிரகாஷ், வைரஸ் வசந்த், சுடுதண்ணி சுப்பிரமணி, காய்ச்சல் கருப்பன், தும்மல் சேகர், ஆம்புலன்ஸ் ஆதி, கோவாக்ஸின் சூர்யா, சானிடைசர் ஸ்ரீராம்....என அந்த பட்டியல் நீள்கிறது

இவர்களது கொரோனா கால அடைமொழியால் திருமண பேனர், கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறி சிலர் வியப்புடன் பார்த்துச் சென்றாலும் சமூக வலைதளங்களில் இவர்களின் பேனர் வைரலாகி, இந்த 'கொலைவெறி பாய்ஸை' கொரோனா கோமாளிகளாக மாற்றியுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments