தமிழ்நாட்டில் இன்று 22,720 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

0 4120

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரமாக சரிந்துள்ளது   கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9ஆயிரத்து 118 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் ஆயிரத்து 227பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள், ஈரோட்டில் மேலும் ஆயிரத்து 41பேரும், சென்னையில் புதிதாக 559 பேரும், திருப்பூரில்  542 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒரே நாளில் 22 ஆயிரத்து 720 பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24 மணி நேரத்தில் 19 வயது சென்னை இளைஞர், 96 வயது வேலூர் முதியவர் உள்பட 210 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு . தமிழ்நாடு முழுவதும் ஒகு லட்சத்து 523 பேர், சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments