கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக கட்சி மேலிட பொறுப்பாளரிடம் புகார் கணைகள்

0 2107
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக கட்சி மேலிட பொறுப்பாளரிடம் புகார் கணைகள்

ர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு  கட்சியிலும் ஆட்சியிலும் எதிர்ப்புகள் வலுத்துவருவதாக கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவரான விஸ்வநாத் தெரிவித்திருக்கும் கருத்து, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உட்கட்சி பூசல் குறித்து கட்சி மேலிட பொறுப்பாளர் அருண் சிங், எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். அப்போது, எம்எல்சி ஆக இருக்கும் விஸ்வநாத் இப்படி புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கட்சிக்கு பங்களித்திருந்தாலும், வயதாவதால் எடியூரப்பாவால் வேகமாக செயல்பட முடியாது என்றும் எனவே அவரை மாற்ற வேண்டும் எனவும் விஸ்வநாத் உள்ளிட்டோர் அருண் சிங்கிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments