தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி

0 4490

மிழ்நாட்டிற்கு  தேவையான தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், முதலமைச்சருக்கு வரவேற்பும், காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

முன்னதாக, டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாலை பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதற்காக பிரதமர் தனக்கு வாழ்த்துச் சொன்னதாக கூறினார்.
கூடுதலாக தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

 பிரதமரிடம் வழங்கியுள்ள மனுவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் நிறைவேறும் வரை, தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் கூறினார். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களோடு கலந்துபேசி நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி அளித்தார் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments