பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

0 3553
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்து நிறைவேற்ற வலியுறுத்தினார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்தனர். காலை 10 மணியளவில் டெல்லி விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பும், காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

முன்னதாக, டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாலை பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments