மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் அமெரிக்கா பயணம்

0 4249
மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் அமெரிக்கா பயணம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக நாளை மறு நாள் அமெரிக்கா செல்கிறார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக நாளை மறு நாள் அமெரிக்கா செல்கிறார்.

மருத்துவ பரிசோதனை முடிந்து, அமெரிக்காவில் சிறிது காலம் ஓய்வெடுக்கவும் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்துடன் குடும்பத்தினரும் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் ஹாலிவுட் பட படபிடிப்புக்காக பிப்ரவரி மாதத்தில் இருந்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments