மும்பை அருகே அலையின் சீற்றத்தால் சேதமடைந்து பாதியளவு கடலில் மூழ்கிய கப்பல் : பணியில் ஈடுபட்டிருந்த 16 பேரை பாதுகாப்பாக மீட்ட கடலோரக் காவல்படை

0 1730
மும்பை அருகே அலையின் சீற்றத்தால் சேதமடைந்து பாதியளவு கடலில் மூழ்கிய கப்பல் : பணியில் ஈடுபட்டிருந்த 16 பேரை பாதுகாப்பாக மீட்ட கடலோரக் காவல்படை

மும்பை அருகே கடலில் எண்ணெய்க் கிணறு பணியில் ஈடுபட்டிருந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதிலிருந்த 16 பேரையும் கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர்.

மும்பை அருகே அரபிக் கடலில் எண்ணெய்க் கிணறு பணியில் ஈடுபட்டிருந்த மங்கலம் என்கிற கப்பல் அலைகளின் சீற்றத்தில் சேதமடைந்து பாதியளவு கடலில் மூழ்கியது.

இது குறித்துத் தகவல் அறிந்த கடலோரக் காவல்படையினர் 2 சேட்டக் ஹெலிகாப்டர்களில் மீட்புப் பணிக்குச் சென்றனர். ஹெலிகாப்டர்களில் இருந்து வடத்தைப் போட்டுக் கப்பலில் இருந்த 16 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments