தற்கொலை செய்து கொள்ள போவதாக ட்விட்டரில் நடிகை மீரா மிதுன் பதிவு

0 13334

ற்கொலை செய்து கொள்வதாக ட்விட்டரில் மிரட்டல் விடுத்த மீரா மிதுனுக்கு சென்னை பெருநகர போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முதலமைச்சர் மற்றும் பிரதமரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை மீரா மிதுன், அஜித் ரவி என்பவர் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், அவர் மீது பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் நடிகர் சுஷாந்த் சிங் போல் தன்னுடைய மரணத்துக்கு பிறகாவது அஜித் ரவிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, புகாரை மின்னஞ்சல் வழியாக அளிக்குமாறு தெரிவித்துள்ளது. அந்த பதிவையும் நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments