ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவையாக மாற்றும் கேள்வி தற்போது வரை எழவில்லை - சபாநாயகர் அப்பாவு

0 2541
ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவையாக மாற்றும் கேள்வி தற்போது வரை எழவில்லை - சபாநாயகர் அப்பாவு

மந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவையாக மாற்றும் கேள்வி தற்போது வரை எழவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில், 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் 21ம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்க உள்ளது.

அதற்கான பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற கலைவாணர் அரங்கம், ஜார்ஜ் கோட்டையில் இடம் உள்ளது என்றார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments