பிரான்சில் முதியவரின் தோளில் தஞ்சமடைந்திருக்கும் புறா..!

0 2173
பிரான்சில் முதியவரின் தோளில் தஞ்சமடைந்திருக்கும் புறா..!

பிரான்சில் 80 வயதான முதியவர் ஒருவரின் தோளில் தஞ்சமடைந்துள்ள புறாவின் செயல் காண்போரை வியப்படைய செய்கிறது.

BRITTANY நகரில் வசித்துவரும் சேவியர் போகெட் (Xavier Bouget) என்பவர், தனது வீட்டில்  பிளான்சான் (Blanchon) என்ற வெள்ளை நிற பெண் புறாவை செல்லப்பிராணி போல் வளர்த்துவருகிறார்.

பூனையிடமிருந்து தப்பிக்க முயன்று தரையில் விழுந்த புறாவை மீட்ட சேவியர், பல ஆண்டுகளாக அதனை வளர்த்துவருவதாக தெரிவிக்கிறார்.

எப்போதும் சேவியர் தோளிலேயே குடிக்கொண்டிருக்கும் பிளான்சான், சைக்கிளில் செல்லும்போது, அவர் தலையில் ஏறி பயணிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments