பயாலஜிகல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனா தடுப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு

0 2839
பயாலஜிகல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி கொரோனா தடுப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு

ரும் அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு தயாராக உள்ள பயாலஜிகல் -இ நிறுவனத்தின் தடுப்பூசி, கொரோனா தடுப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் (National Technical Advisory Group on Immunisation) தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

Corbevax என பெயிரடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவிலேயே தயாராகி வருகிறது. தற்போது இந்த தடுப்பூசியின் 3 ஆம் கட்ட சோதனை நடப்பதாகவும், மரபணு மாற்ற வைரசுகளுக்கு எதிராக அது 90 சதவிகித த்திற்கும் கூடுதலான பாதுகாப்பை தரும் என பயாலஜிகல்-இ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அரோரா கூறினார்.

இந்த தடுப்பூசியை போன்று அமெரிக்காவின் நோவாவேக்ஸ்  நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை, சீரம் இந்தியா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது.

90 சதவிகித பாதுகாப்பை தரும் இந்த தடுப்பூசியை ஆண்டொன்றுக்கு 100 கோடி டோசுகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரோரா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments