எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் :சிறப்பு நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1790
எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு :சிறப்பு நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சிறப்பு நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பதவிகள் நிரப்பப்பட்டு விட்டதாகவும், பிற உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments