தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா? பார்கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

0 3460

தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா என பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவலர்களை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசிய புகாரில் சிக்கிய பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு  சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முந்தைய விசாரணையில் உத்தரவிடப்படி, பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றிவிடும் என மக்கள் நினைப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதி, வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் வெளிவருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து, இந்த வழக்கில் நாளை  விரிவான உத்தரவு பிறப்பிக்கபடும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments