அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! -சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2438

தென்மேற்குப் பருவக் காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments