ஆபாசப் பேச்சில் பணம் சம்பாதித்து ஷேர், பிட்காயினில் முதலீடு: டாக்சிக் மதனின் நயவஞ்சகம்..!

0 12319
ஆபாசப் பேச்சில் பணம் சம்பாதித்து ஷேர், பிட்காயினில் முதலீடு: டாக்சிக் மதனின் நயவஞ்சகம்..!

ப்ஜி மதன், யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தம், பிட்காயினில் முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதனின் ஆபாச பேச்சுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி, அவனது முன் ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆபாசப் பேச்சின் மூலம் விடலைகளின் நெஞ்சங்களில் நஞ்சு கலந்த டாக்சிக் மதன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளான். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வரும் நிலையில், நேற்று வரை தனது யூடியுப் சேனல்களில் பெண்களுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளான்.

அதேசமயம், மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவனது தந்தையிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். மதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை சேகரிக்கிறது வருகின்றனர்.

யூடியூபர் மதனோடு ஆன்லைனில் விளையாடும் நபர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களின் பிள்ளைகளாகவும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதை விசாரணையில் கண்டறிந்த போலீசார், அவனது வங்கிக் கணக்குகள் முதலீடுகள் குறித்து ஆய்வு செய்தனர். தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்திலும், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்ஸியிலும் மதன் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தினர், முதலீடுகளை சுற்றி போலீசார் வலை இறுகியுள்ள நிலையில், மதன் சரணடைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மதனின் இல்லத்தில் இருந்து கணினி, வலைதளங்கள் தொடர்பான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments