சென்னை அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை

0 2552

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்து, டெல்லியில் இருந்து சென்னை அழைத்து வந்த சிவசங்கர் பாபாவிடம், விடிய விடிய விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உத்தரகாண்டில் இருந்து தப்பியோடி டெல்லியில் தலைமறைவாகியிருந்த சிவசங்கர் பாபா, நேற்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சிவங்கர் பாபாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற ஆணை பெற்று சென்னை அழைத்து வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவங்கர் பாபா ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments