டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை..! ரூ.61.09 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர்

0 1738
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை..! ரூ.61.09 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர்

டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன் அடையும் வகையில், 61 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் முழுமையாகவும், கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

இந்த சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ், ஒருலட்சத்து 90 ஆயிரம் ஏக்கருக்கு முழு மானியத்தில் ரசாயன உரங்களும், 24 ஆயிரம் ஏக்கருக்கு பசுந்தாளுர விதைகள், இடுபொருட்கள் உள்ளிட்டவை மானிய விலையிலும் வழங்கப்படும்.வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் வழங்கவும், நீரை சேமிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்கவும் இந்த நிதியில் இருந்து உதவி செய்யப்படும்.

ஏற்கனவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் காரணமாக, குறுவை நெல் சாகுபடி மூன்றரை லட்சம் ஏக்கரை விட அதிகமாக மேற்கொள்ளப்படும் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments