மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை.... கோவை குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!

0 2440

கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அருவிகளிலும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிறுவாணி ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இரு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சித்திரைச்சாவடி அணையைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

வால்பாறை வட்டாரத்தில் இரு நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் வெள்ளமலை, இறைச்சிப்பாறை, சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. நடுமலை ஆறு, வாழைத்தோட்ட ஆறு, கூழாங்கல் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments