சீனாவின் ஆதிக்கத்துக்கு மாற்றாக ரஷ்யாவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரிப்பதாக வல்லுநர்கள் கருத்து

0 4020

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவை நேரடிப் போட்டியாளராகக் கருதவில்லை என்றும், சீன வணிக ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில், அதற்கு மாறாக ரஷ்யாவை ஆதரிக்கும்படி நட்பு நாடுகளைத் தூண்டுவதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ச் சந்தித்துப் பேசினர். அமெரிக்கத் தேர்தலில் தலையீடு, மேலை நாடுகளுக்கு எதிரான இணைய வழித் தாக்குதல் ஆகியவற்றால் உலக அரங்கில் புடின் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதை அவருக்கு உணர்த்த பைடன் விரும்பியதாகக் கூறப்படுகிறது.

அணு ஆயுதப் போட்டி உள்ளிட்ட பதற்றங்களைத் தணிக்க பைடன் விரும்புவதாகவும், புடின் அவ்வாறு எண்ணுகிறாரா என்பது தெரியவில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments