கொரோனா தடுப்பு வழிமுறைகளை புறக்கணித்தால் 2 ஆம் அலையை விட 3 ஆம் அலையில் நோய் பரவல் 2 மடங்காக இருக்கும்..! -மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

0 4052

கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றால் மகாராஷ்டிராவில் அதி வேகத்துடன் 3 ஆம் அலை வீசும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா பிளஸ் என்ற மரபணுமாற்ற வைரஸ் மூலமாக ஏற்படும் இந்த அலையில் நோய்தொற்று பரவலின் வேகம், இப்போது உள்ளதை விட இருமடங்காக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தினால், 2 ஆம் அலையின் தாக்கம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே 3 ஆம் அலை துவங்கி விடும் எனவும், அப்போது தொற்று பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயரும் எனவும் அவர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களிட்ல சுமார் 10 சதவிகிதம் பேர் குழந்தைகளாக இருப்பார்கள் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments