நேபாளத்தில் பருவமழை தீவிரமடைந்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; 7 பேர் உயிரிழப்பு..

0 2060

நேபாளத்தில் கனமழையால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காணவில்லை. நேபாளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சிந்துபால்சோக் மாவட்டத்தில் பாயும் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலாம்சி என்னும் நகரில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சேறும் சகதியும் கலந்த நீரால் இருநூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சூழப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் 7 பேர் உயிரிழந்தனர்.

தண்ணீரில் மூழ்கிய பகுதிகளைச் சேர்ந்த பலரைக் காணவில்லை என்பதால் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments