இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேருக்கு கொரோனா உறுதி; 1,03,570 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 2712

நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இரண்டாவது நாளாக சற்று அதிகரித்து 67 ஆயிரத்து 208 ஆக பதிவாகியுள்ளது.

24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு 2 ஆயிரத்து 330 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 3 ஆயிரத்து 570 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 71 நாட்களில் இல்லாத அளவுக்கு 8 லட்சத்து 26 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

மாநிலவாரியாக தினசரி பாதிப்பு அடிப்படையில், 13ஆயிரத்து 270 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு கேரளம் முதலிடத்திலும், 10 ஆயிரத்து 448 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு தமிழகம் இரண்டாமிடத்திலும், 10 ஆயிரத்து 107 பேருக்கு உறுதி செய்யப்பட்டு மகாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளன.

நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 26 கோடியே 55 லட்சமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments