கணவன் குடும்பத்தாரின் டார்ச்சர்... குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 6606

சென்னை மாதவரம் அருகே கணவன் குடும்பத்தாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி வந்த இளம்பெண் குடும்பத்தினருக்கு உண்மை தெரிந்ததால், பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், கனிமொழி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், குழந்தை இல்லையென கனிமொழியின் மாமியார் திட்டி தீர்த்ததால், தான் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரை கனிமொழி நம்ப வைத்துள்ளார். சந்தேகமடைந்து கணவர் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்துள்ளார்.

அதில் கர்ப்பம் இல்லையென தெரிய வந்த நிலையில், கனிமொழி பயத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments