யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள்: ரஷ்யா, வேல்ஸ் மற்றும் இத்தாலி அணிகள் வெற்றி

0 2924

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் ரஷ்யா, வேல்ஸ் மற்றும் இத்தாலி அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா மற்றும் பின்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், 45வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் முதலாவது கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வீழ்த்தி ரஷ்யா அணி வெற்றிபெற்றது.

 மற்றொரு ஆட்டத்தில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள துருக்கி அணியும், வேல்ஸ் அணியும் மோதின. துருக்கி அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காத நிலையில், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே மற்றும் கன்னார் ராபர்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது

மூன்றாவது ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 26 மற்றும் 52வது நிமிடங்களில் இத்தாலி வீரர் மானுவேல் லோகடெல்லி இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில் சிரோ இம்மோபைல்  ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை, இத்தாலி அணி எளிதாக வீழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments