ஆஸ்திரேலியாவில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வலை பின்னிய சிலந்தி..! பாதையெங்கும் சிலந்தி வலையைக் கண்டு மக்கள் அச்சம்

0 27278
ஆஸ்திரேலியாவில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வலை பின்னிய சிலந்தி..! பாதையெங்கும் சிலந்தி வலையைக் கண்டு மக்கள் அச்சம்

ஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து நீண்ட தூரத்திற்கு வலை பின்னலை ஏற்படுத்தியிருப்பது அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.

விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது வெள்ளம் முற்றிலும் வடிந்துள்ள நிலையில், சிலந்தி வலை அப்பகுதி மக்களை அச்சப்படுத்தியுள்ளது.

கிப்ஸ்லேண்ட் என்ற இடத்தில் மெல்லிய பட்டாடை போல சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலந்தி வலை பின்னப்பட்டுள்ளது. வெள்ளத்தால் தண்ணீருக்குள் மூழ்காமல் இருக்க ஆயிரக்கணக்கான சிலந்திகள் இதனைக் கட்டியிருப்பதாக ஆய்வாளர் கூறுகின்றனர்.

குளிர்ந்த வானிலை காரணமாக ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து வலை கட்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments