பழங்குடி கிராமத்தில் முதல் தலைமுறை பட்டதாரியான இளம்பெண்... ஊரடங்கு காலத்தில் அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பு..!

0 5231

கோவை மாவட்டம் வாளையாறு அருகே பழங்குடி கிராமத்தில் முதல் முறையாக பட்டப்படிப்பு முடித்த இளம்பெண், ஊரடங்கு காலத்தில் அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.

தமிழக - கேரளா எல்லையாகவும், கோவை மாவட்டத்தில் இறுதி கிராமமாகவும் உள்ள சின்னாம்பதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற அந்தப் பெண், பி.காம்.சி.ஏ முடித்துள்ளார். ஊரடங்கால் பள்ளி செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் அப்பகுதி குழந்தைகளுக்கு சந்தியா பாடம் நடத்தி வருகிறார்.

கல்லூரி படிக்கும் போதே அக்கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுப்பது, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது போன்ற பணிகளை சந்தியா செய்து வந்துள்ளார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments