சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் புறப்பட்டனர்... கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு

0 2181

விண்வெளியில் சீனா உருவாக்கி உள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.

இந்த விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 340 முதல் 450 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் ஷென்சூ 12 என்ற விண்கலத்தில் 3 பேரும்  புறப்பட்டு சென்றனர். அவர்கள் 3 மாதங்கள் தங்கி, விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, பெட்டகத்தை விட்டு வெளியேறி, பல மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தபடி, கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அவர்களை ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாகத்துடன் அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments