தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பேசுகிறார்

0 4571

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்தனர். காலை 10 மணியளவில் டெல்லி விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர், அங்கிருந்து தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை பிரதமர் அலுவலகத்திற்கு செல்லும் மு.க.ஸ்டாலின், மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்க உள்ளார்.

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சந்தித்து பேசுகிறார்.

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments