பாம்பன் தூக்குப் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு... அவ்வழியாக செல்லும் ரயில் சேவை நிறுத்தம்

0 1555

பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அவ்வழியாக செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்காளாயினர்.

பாம்பன் ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பாதிப்புகளை கண்டறிவதற்கு  அங்கு 100 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக  நேற்றிரவு ராமேஸ்வரத்தில் இருந்து கோவை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு ரயில் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென்னக ரயில்வேயின் பராமரிப்பு அதிகாரிகளால் கோளாறை சரி செய்ய முடியாமல் போனதை அடுத்து 10 பேர் கொண்ட ஐ.ஐ.டி.  குழுவினர் இந்தப் பணியில்  ஈடுபட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments