சென்னைக்கு கொண்டுவரப்பட்டார் சிவசங்கர் பாபா... சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

0 2030

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.  பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

சென்னை கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் என்ற உண்டு, உறைவிட பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா, தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறிக் கொண்டு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியைகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் தெற்கு டெல்லியின் சாக்கெட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றிரவு விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர் கார் மூலம் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட்டபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபப்ட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments