கெட்ட சிவாவை மொட்டை சிவாவாக தூக்கிய போலீஸ்..! கிராபிக்ஸ் சாமியார் சோலி முடிஞ்சி..!

0 4158

பெண் தோழியின் ஆதரவுடன் டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பித்து  நேபாளம் செல்ல திட்டமிட்ட டம்மி பாபா சிவசங்கரனை சென்னை காவல்துறையினர் அதே பெண் தோழியை வைத்து டெல்லியில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்தனர். சிறுமிகள் மீதான பாலியல் இச்சையால் புத்தி கெட்ட சிவாசங்கரன்,  மொட்டை சிவாவாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

700 கோடி ரூபாய் சொத்துடன் 64 ஏக்கர் ஆசிரமம்..! கடவுள் அவதாரம் என்று சிவசங்கரன் அளந்து விட்டதை நம்பி இன்னும் தெளிவடையாத வில்லன் நடிகர் சண்முகராஜனை போன்ற, சில மனோவசிய பக்தகோடிகள்..!

சிங்கமுக சிம்மாசனத்தில் இலவம் பஞ்சு மெத்தையில் அமர்ந்து தினமும் உடல் நோகாமல் ஆன்மீக உரை என்ற பெயரில் இரட்டை அர்த்த உரையாடல்கள், காதல் பஜனை, கேலி, கிண்டல் பேச்சு என ஜபர்தஸ்தாக பொழுதைப் போக்கிய சிவசங்கரனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார்களோடு வெளியேவந்ததுமே, ஒன்பது கிரகங்களும் தனக்கு எதிராக திரும்பி நிற்பதை உணர்ந்து உஷாரான டம்மி பாபா சிவசங்கரன் சென்னையில் இருந்து தப்பிச்சென்றான்.

அவன் எங்கு இருக்கிறான் என்பது மர்மமாக இருந்த நிலையில், சிவசங்கரன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவனுக்கு ஜாமீன் பெறுவதற்காக ஊருக்கே ஒளியை கொடுப்பதாக கூறிய சிவசங்கரன், நெஞ்சுவழி என்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒழிந்திருப்பது தெரியவந்தது. அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு முன் ஜாமீன் கேட்ட நிலையில், அது கடல்லயே இல்லையாம் என்று மறுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த புகாரில் இருந்து தப்பிக்க தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களை விட்டு தன்னை ரொம்ப நல்லவன் என்று பேச வைக்க, அவர் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. சுஷில் ஹரி பள்ளியில் இருந்து 50 சதவீத மாணவ மாணவியர் டிசி பெற்றுச்சென்று விட்டதை தொடர்ந்து டம்மி பாபாவுக்கு ஆதரவாக பேச எவரும் முன்வரவில்லை.

இதற்கிடையே சிபிசிஐடி காவல்துறையினர் தன்னை கைது செய்ய டேராடூன் செல்லும் தகவல் ஆசிரம கையாட்கள் மூலம் சிவசங்கரனுக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து தான் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து ஓட்டல் அறையை காலி செய்து செல்வது போல அங்கிருந்து டெல்லிக்கு தப்பியுள்ளான். நேபாளம் வழியாக நித்தியானந்தா போல தலைமறைவாகும் திட்டத்துடன் ஓடிய சிவசங்கரன், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக மொட்டை அடித்து காவி உடை அணிந்துள்ளான்.

சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் பெண் தோழி ஒருவரின் சிபாரிசின் பேரில் சிவசங்கரன் மருத்துவமனையில் தங்கி இருந்தது தெரியவந்தது. அதேபெண் தோழி கொடுத்த தகவலின் பேரில் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை அறிந்த போலீசார், காசியாபாத்தில் வைத்து சிவசங்கரனை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து சிவசங்கரனை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். மொட்டை தலையுடன் பார்ப்பதற்கு ஜெய்சங்கர் படங்களில் வரும் வில்லன் போல விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டான் சிவசங்கரன்..!

ஊருக்கு நான்கு பெண் தோழியர்களுடன் லீலைகள் புரிந்த டம்மி பாபாவை போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு கவனிப்புடன் விசாரித்தால் எத்தனை வருடமாக சிறுமிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டான், எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இது இல்லாமல் வேறு என்ன மாதிரியான சட்டவிரோத செயல்களில் எல்லாம் இவன் ஈடுபட்டு வருகின்றான் என்பது போன்ற விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..!

இதற்கிடையே சிறுமிகளிடம் அத்துமீறும் இவனை போன்ற பாலியல் அரக்கர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments