சாலையை பாராக்கிய மதுப்பிரியர்..! வீதியை படுக்கையாக்கிய மதுவெறியர்..! ஏசிபாரான ஏடி.எம்கள்

0 7125

தூத்துக்குடியில் டாஸ்மாக்கில் மதுவாங்கிய மதுப்பிரியர் ஒருவர் சாலையின் நடுவில் அமர்ந்து, மது அருந்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில், சென்னையில் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வீதியில் படுத்து உருண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது

தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதில் இருந்து மதுப்பிரியர்களும்,அளவுக்கதிகமாக குடிக்கின்ற மது வெறியர்களும், செய்யும் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டாலும், பார் திறக்கப்படாததால் குடிமகன்கள் சாலை ஓரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மறைமுகமாக மது அருந்தி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே நடு சாலையில் ஒரு முதியவர் அமர்ந்து மது பாட்டில் மற்றும் அதற்குத் தேவையான சைட் டிஸ் உணவுகளை விரித்து வைத்து சர்வசாதாரணமாக சாலையில் மது அருந்து மது அருந்த தொடங்கினார்

இதனால் அந்த சாலையில் வந்த வாகனங்கள் சில நிமிடங்கள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து அவரை பிடித்து போக்குவரத்தை சரிசெய்தனர். அந்த போதை ஆசாமியை மன நலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர்.

அதே போல சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள S. B. I வங்கியின் ஏடிஎம் மையத்தின் வாசலில் பெண் ஒருவர் குப்புற படுத்துக்கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அருகில் சென்ற பார்த்த போது அவர் மதுவெறியர் என்பது தெரியவந்தது

சிறிது நேரம் கழித்து பஞ்சு மெத்தையில் படுதிருப்பது போல மல்லாந்து படுத்து கொண்டு தன்னை சுற்றி நின்றவர்களை பார்த்து மெல்லிய புன்னகையுடன் கையெடுத்து கும்பிட்டார்

ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் , அந்த மது வெறியரை தாண்டி உள்ளே சென்றனர் மேலும் அவர் ஆடைகளும் அறை குறையாக விலகியதால் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் முகம் சுளித்தனர்

இதனை பார்த்த ஒரு இளைஞர் அருகில் வாட்டர் பாட்டிலில் தண்ணீரை எடுத்து போதையில் இருந்த பெண்ணின் முகத்தில் ஊற்றியதில் அவர் சற்று தெளிந்து அருகில் உள்ள வங்கி வாசலில் போதையில் மீண்டும் வெளியே சென்று படுத்து கொண்டார்

ஏடிஎம் மையத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுத்து செல்கின்றனர் ஆனால் ஏடிஎம் மையத்திற்கு பாதுகாப்புக்கு என்று பாது காவலர் எவரும் பணியில் இல்லாததால் குடிகாரர்களின் ஓய்விடமாகவும், ஏசி பாராகவும் எஸ்.பி.ஐ, ஏடி.எம் மாறிவருவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments