விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால் பிளஸ் 2 படிக்கும் சிறுமி தற்கொலை

0 6368
மதுரையில் விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், பிளஸ் 2 படிக்கும் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், பிளஸ் 2 படிக்கும் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ரஜினிகாந்த் - தாமரைசெல்வியின் மகள் அபிநயாவுக்கும் அவரது தாய்மாமனுக்கும் கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தனது விருப்பமின்றி திருமண முயற்சி நடப்பதாக போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அபிநயா அளித்த புகாரையடுத்து, பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

உறவினர் வீட்டில் சில நாட்கள் இருந்த மாணவி வீடு திரும்பிய நிலையில், மீண்டும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் செவ்வாயன்று அவரின் அறையின் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவியின் உடல் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்ததையடுத்து உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments