தமிழ்நாட்டில் மேலும் 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு; 21,058 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 4581

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் என்ற அளவை நோக்கி, வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 ஆயிரத்து 448 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஆயிரத்து 420 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள், ஈரோட்டில் மேலும் ஆயிரத்து 123 பேரும், சென்னையில் புதிதாக 689 பேரும், திருப்பூரில் 608 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 58 பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

22 வயது சென்னை இளம்பெண், 91 வயது சென்னை மூதாட்டி உள்பட ஒரே நாளில் 270 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு முழுவதும்
ஒகு லட்சத்து 14 ஆயிரத்து 335 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments