ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்திப்பு..! இரு வல்லரசு நாடுகளின் தலைவர்களும், பரஸ்பரம் கைகுலுக்கி, வணக்கம் தெரிவித்தனர்

0 2117

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கைகுலுக்கிக் கொண்டனர்.

அமெரிக்க, ரஷ்ய அதிபர்களிடையான பேச்சு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறுகிறது. சந்திப்பை முன்னிட்டு மாளிகைக்கு வந்த இரு தலைவர்களையும் சுவிட்சர்லாந்து அதிபர் கய் பார்மெலின் வரவேற்றார்.

இதையடுத்து ஜோ பைடனும், விளாடிமிர் புடினும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டு பேச்சு நடத்துவதற்காக மாளிகைக்குச் சென்றனர். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றபின் ஜோ பைடன் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments