சென்னையில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

0 3863

சென்னை சேத்துப்பட்டில் கொள்ளையன் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த கொள்ளையன் வடிவழகனை, நேற்று இரவு 7 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி சாய்த்தது.

இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்னர். தலைமறைவாக உள்ள மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கொல்லப்பட்ட வடிவழகன் மீதும், கைது செய்யப்பட்டவர்கள் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரே குழுவாக இருந்த அவர்களுக்குள் சிறையில் இருந்த போது ஏற்பட்ட மோதல் முற்றி கொலையில் முடிந்துள்ளது. இதனிடையே சென்னையில் ரவுடிகளை கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments