15 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமா உள்பட 3 பேர்..

0 10498
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே 15 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமா உள்பட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே 15 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமா உள்பட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அய்யர்கிணற்று பகுதியை சேர்ந்த மாலைக்கன் நோயாளியான தேவதாஸ் என்பவர், மனைவியை பிரிந்து தனது 15 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

மதுவுக்கு அடிமையான இவர், சிறு வயது முதலே சிறுமிக்கு மது கொடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி உள்ளதால், இதனை பயன்படுத்திக்கொண்ட சிறுமியின் மாமா கண்ணன், கூட்டாளிகள்  ராஜ்குமார், மணிகண்டன் ஆகியோர், சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சிறுமி மதுபோதையில்,  உளறியதால் அப்பகுதி மக்கள் சைல்டு லைனுக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments