எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு, கோஷம் எழுப்பக் கூடாது - ஓ. பன்னீர் செல்வம்

0 3227
எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை தவிர, அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு, வாழ்த்து கோஷம் எழுப்பக் கூடாது என தொண்டர்களுக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை -ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் வந்தபோது, அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்கள், தேனி மாவட்ட சிங்கம் - தமிழ்நாட்டின் தங்கம் என கோஷம் எழுப்பினர்.

உடனே அவர்களை அழைத்த ஓ. பன்னீர் செல்வம், இங்கு எமஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டுமே வாழ்த்தி கோஷம் எழுப்ப வேண்டுமே தவிர, வேறு யாரையும் வாழ்த்தி கோஷம் எழுப்பக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments