பராமரிப்பின்றி அறுந்துபோன இன்கான் தொங்கும் பாலத்தை மீண்டும் கட்டிவருகின்றனர் ஹுஞ்சிரி சமூக மக்கள்..

0 2225

பெரு நாட்டின் கனாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஞ்சிரி சமூகத்தை சேர்ந்த மக்கள், பராமரிப்பின்றி அறுந்துபோன கெஸ்வாச்சகா பாலம் என்று அழைக்கப்படும் இன்கான் தொங்கும் பாலத்தை மீண்டும் கட்டி வருகின்றனர்.

அபுரிமேக் நதியின் குறுக்கே பாரம்பரிய நெசவு நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலத்தை யுனேஸ்கோ 2013-ம் ஆண்டு மனிதகுலத்தின்  கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரித்தது.

500 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பாலம் கொரோனா பரவல் காரணமாக பராமரிக்காமல் விட்டதால் கடந்த மார்ச் மாதம் அறுந்து விழுந்தது. 

33 மீட்டர் நீளமும் 1.20 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தை இன்கான் முறைப்படி பாரம்பரிய நெசவு நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டும் கட்டி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments