வின்டோஸ் OS -ன் அடுத்த பதிப்பை வெளியிடுகிறது மைக்ரோசாப்ட்..! வின்டோஸ் 10-க்கான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என தகவல்

0 8300

விண்டோஸ் இயங்கு தளத்தின் அடுத்த பதிப்பு வரும் 24 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வின்டோஸ்-10 க்கான சேவைகள் அனைத்தையும் நிறுத்திக் கொள்ள இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 ஜூலை 29 முதல் வின்டோஸ் 10 ஹோம் மற்றும் புரோ இயங்கு தள சேவைகளை மைக்ரோசாப்ட் வழங்கி வருகிறது. வின்டோசின் புதிய பதிப்பை மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா மற்றும் பனோஸ் பனாய் ஆகியோர் அறிமுகப்படுத்த உள்ளனர்.

மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பு மென்பொருள் டெவலப்பர்களுக்கும், கிரியேட்டர்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் என சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

அவர் தனிப்பட்ட முறையில் பல மாதங்களாக அதை பயன்படுத்தி சோதித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments