அதிவேகமாக வந்த பைக் கவிழ்ந்து 10 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு இளைஞர் பலி

0 4413
குமரி மாவட்டத்தில் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

குன்னம்பாறையை சேர்ந்த விஜின், பல்சர் பைக்கில், திங்கட்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அழகியமண்டபம் அருகே மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிர்பாராதவிதமாக பைக் கவிழ்ந்ததில் தலைக்குப்புற விழுந்த விஜின், சுமார் 10 அடி தூரத்திற்கு பைக்குடன் இழுத்து செல்லப்பட்டு, எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயமடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments