”தடுப்பூசி போடுவதால் மரணம் ஏற்படும் என்பது தவறான செய்திகள்” -சுகாதார அமைச்சகம்

0 1960

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏற்படும் இறப்பிற்கும், அல்லது உடல்நல பாதிப்பிற்கும், தடுப்பூசி தான் காரணம் என தாமாக எந்த முடிவுக்கும் மக்கள் வந்துவிடக்கூடாது என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி 16 முதல் இந்த மாதம் 7 ஆம் தேதி வரை மொத்தம் 23 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டதில் 488 பேர் உயிரிழந்தனர் என சில ஊடக செய்திகள் வெளியாகின.

தடுப்பூசி குறித்த முழுமையான புரிதல் இன்மை காரணமாக இது போன்ற செய்திகள் வெளியாவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வளவு கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட பிறகும் நாட்டில் அதன் பக்கவிளைவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு வெறும் 0.0002 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவர்களின் இறப்பு ஒரு சதவிகித்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், தடுப்பூசி இந்த மரணங்களை தடுக்கும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments