சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி

0 2304

சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

குழந்தை பிரசவித்த 3-வது நாளில் இருந்து பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, எழும்பூரில் தாய்மார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டும் போடப்பட்டு வருகிறது. உடல் வெப்ப பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தாய், சேய் நல மருத்துவமனையின் இயக்குநர் விஜயா, பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் அச்ச உணர்வு இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments