தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை இருக்கும்

0 1824

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யுமெனவும், நீலகிரி, தேனி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், 2 நாட்களுக்கு நீலகிரி, தேனி, கோவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments