பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குவியும் புகார்கள்

0 1744
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குவியும் புகார்கள்

டகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டில் வசித்து வரும் 2 வீராங்கணைகள் பாலியல் புகாரளித்துள்ளனர்.

தன்னிடம் பயிற்சிக்கு வரும் வீராங்கனைகளுக்கு பிசியோதெரபி வழங்குவதாக கூறி நாகராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

நாகராஜனால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக தற்போது வரை 6 வீராங்கணைகள் எழுத்துப்பூர்வமாக புகாரளித்திருந்த நிலையில், அதில் 2 பேர் வெளிநாட்டில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்றால், தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வீராங்கனைகள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments