நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாய கருக்கலைப்பு செய்ததாக வழக்கு : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

0 2498
நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாய கருக்கலைப்பு செய்ததாக வழக்கு : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

டிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாய கருக்கலைப்பு செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முன் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகவும்,குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்களை சேகரித்து வருவதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments